Last Updated:
மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது 2 ஆயிரம் கோடி ரூபாய் வகுப்பறை கட்டுமான ஊழல் வழக்கு.
டெல்லியில் வகுப்பறை கட்டுமான மோசடி தொடர்பாக ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வகுப்பறைகள், பள்ளி கட்டடங்களை கட்டுவதில் ஊழல் நடந்திருப்பதாக டெல்லி காவல்துறையின் ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா மற்றும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான பணிகள் 34 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டதும், அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுமான பணிகள் அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படாததால் கட்டுமான செலவு பெரும் அளவு அதிகரித்துவிட்டதாகவும், மேலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
April 30, 2025 10:15 PM IST


