• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பஞ்சாப் அணியிடம் தோற்றால் சிஎஸ்கே அதிகாரபூர்வமாக வெளியேறிவிடும்! | CSK will be officially eliminated if they lose to Punjab!

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பஞ்சாப் அணியிடம் தோற்றால் சிஎஸ்கே அதிகாரபூர்வமாக வெளியேறிவிடும்! | CSK will be officially eliminated if they lose to Punjab!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் சீசன் 2025-ல் சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 10-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பு இல்லைதான். ஆனாலும் கணித ரீதியாக வாய்ப்பு உள்ளதாக எப்போதுமே ஒரு பேச்சு அடிபடும். அந்த வகையில் பார்த்தாலும் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் மேலும் ஒரு உதை வாங்கினால் அதிகாரபூர்வமாக சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பில்லாமல் வெளியேறிவிடும்.

ஒரு காலத்தில் சிஎஸ்கேவின் கோட்டையாக இருந்த சேப்பாக்கம் மைதானம் இந்த முறை சிஎஸ்கேவின் வீழ்ச்சிக்குக் காரணமாகி விட்டது. மைதானத்தையும் பிட்சையும் குறை கூறி பயனில்லை. அணித்தேர்வு, கேப்டன்சி எல்லாம்தான் கணக்கில் சேரும்.

பஞ்சாப் ஓப்பனர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா செம சாத்து சாத்தி வருகின்றனர். இன்றும் சிஎஸ்கேவுக்கு இவர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள். ஆனால், இவர்களை எடுத்து விட்டால் பஞ்சாப் ஆடிப்போய் விடும். ஏனெனில் கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்லிஸ் ஆகியோருக்கு இன்னும் ஒன்றும் பிடிபடவில்லை.

மேலும், மிடில் ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் மற்ற அணிகளை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது. பிரியான்ஷ் ஆர்யாவின் அந்த அதிரடிச் சதத்தை சிஎஸ்கேவோ தோனியோ இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அது துர் சொப்பனமாக சிஎஸ்கே பவுலர்களிடத்தில் வந்து போய் கொண்டிருக்கும்.

மார்க்கோ யான்சென் நல்ல ஆல்ரவுண்டர்தான். ஆனால், அவரை 5-ம் இடத்தில் இறக்கிப் பார்த்தும் ஒன்றும் பயன் இல்லை. மார்கஸ் ஸ்டாய்னிஸை பஞ்சாப் கிங்ஸ் கொண்டு வரலாம், ஏனெனில் 2024-ல் சேப்பாக்கத்தில் இவர் அடித்த அருமையான சதத்தை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மாறாக, சிஎஸ்கே பேட்டிங் படுமோசமாக உள்ளது மாத்ரே, டேவால்ட் பிரேவிஸ் நீங்கலாக. இதுவரை 21 வீரர்களை களமிறக்கியுள்ளது சிஎஸ்கே. மாத்ரே, பிரேவிஸ், ஷேக் ரஷீத், டேவேலாட் பிரேவிஸ் போன்றோர் சிஎஸ்கேவுக்கு புத்துணர்வு அளித்து வருகின்றனர். இந்தியா யு-19 தொடக்க வீரரான மாத்ரேவின் கூட்டாளி வைபவ் சூரியவன்ஷி அன்று கலக்கியதை இவர் மனதில் கொண்டு உத்வேகத்துடன் ஏதாவது செய்தால் சிஎஸ்கே தேற வழியுண்டு.

இதுவரை வாய்ப்புக் கொடுக்கப்படாத வன்ஷ் பேடி என்ற விக்கெட் கீப்பருக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம். அதேபோல் ஸ்பின் எடுக்குமானால் அஸ்வின் மீண்டும் வர வாய்ப்புண்டு.

சிஎஸ்கே உத்தேச அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன் – வி.கீ), ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத், சாம் கரன், டேவால்ட் பிரேவிஸ், துபே, ஜடேஜா, வன்ஷ் பேடி, அன்ஷுல் காம்போஜ், நூர் அகமட், கலீல் அகமட், பதிரணா.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச அணி: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயஸ் அய்யர், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்க்கோ யான்சென், அஸ்மத்துல்லா ஓமர்சாய், பிரார், செஹல், அர்ஷ்தீப் சிங்.



Read More

Previous Post

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு | At least 14 dead in Kolkata hotel fire; several injured

Next Post

அட்சய திருதியை!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் – கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன..?

Next Post
அட்சய திருதியை!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் – கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன..?

அட்சய திருதியை!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் - கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin