டிராவல் இன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத சூழ்நிலையில் பயணத்தின்போது, எதிர்பாராத காரணத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்குகிறது. இதில் உங்கள் பயணத்தில் ஏற்பட்ட தாமதங்கள், மருத்துவமனைக்கு செல்லுதல் அல்லது நீங்கள் கொண்டு சென்ற பொருட்களை இழப்பது போன்ற உணர்வு சார்ந்த மற்றும் பொருளாதார ரீதியான இரண்டிற்கும் நன்மை தருகிறது.
மெடிக்கல் எமர்ஜென்சி:
ஒருவேளை பூகம்பம் அல்லது புயலின்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டால், அதற்காக கூடிய மருத்துவ செலவுகளை டிராவல் இன்சூரன்ஸ் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம். இதில் மருத்துவமனையில் நீங்கள் தங்கி இருக்கும் நாட்கள், அறுவை சிகிச்சை, தீவிர பராமரிப்பு போன்ற அனைத்தும் அடங்கும்.
இறப்பு அல்லது உடல் ஊனம் தொடர்புடைய பலன்கள்:
மோசமான சூழ்நிலையில் இயற்கை சீற்றம் என்பது தனிநபரின் இறப்பு அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தலாம். எனவே, பெரிய அளவிலான தொகை காப்பீடு செய்யப்பட்ட நபருக்கோ அல்லது அவருடைய குடும்பத்துக்கோ வழங்கப்படும்.
பயணம் தடைபட்டுப் போகுதல்:
ஒருவேளை நீங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து, ஆனால் நீங்கள் கிளம்புவதற்கு முன்பு அங்கு ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்படும் பட்சத்தில், உங்களுடைய பயணத்தை நீங்கள் கேன்சல் செய்ய வேண்டி இருக்கும். எனவே, நீங்கள் சென்ற ஃபிளைட், ஹோட்டல், டூர் புக்கிங்களுக்கான ரீஃபண்ட் தொகையை இந்த டிராவல் இன்சூரன்ஸ் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதலான நாட்கள் தங்குவது:
இயற்கை நிகழ்வுகள் காரணமாக நீங்கள் வீடு திரும்புவதற்கு சற்று கால தாமதம் ஆகலாம். எனவே, நீங்கள் பயணம் சென்ற இடத்தில் திட்டமிட்டதை விட நீண்ட நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த சமயத்தில் ஆகக்கூடிய கூடுதல் தங்கும் செலவு மற்றும் ரீ-புக்கிங் கட்டணங்கள் போன்றவற்றை இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலமாகப் பெறலாம்.
பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பும்போது பெறக்கூடிய காப்பீடு:
ஒரு சில பாலிசிகளில் நீங்கள் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, ஒருவேளை உங்களுடைய வீட்டிற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அதற்கான காப்பீட்டை வழங்குகிறது. இதில் கட்டடம் மற்றும் அதற்குள் இருக்கும் பொருட்கள் ஆகிய இரண்டும் பொருந்தும்.
இயற்கை சீற்றம் ஏற்பட்ட பிறகு பயணம் மேற்கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இன்சூரன்ஸ் ஆவணத்தை கவனமாகப் படிக்கவும்:
டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்கள் என்பது பல்வேறு இன்சூரன்ஸ் வழங்குனர்கள் இடையே மாறுபடலாம். எனவே, குறிப்பிட்ட டிராவல் இன்சூரன்ஸில் என்னென்ன விஷயத்திற்கு காப்பீடு வழங்கப்படும்? எதற்கு வழங்கப்படாது? என்பதை தெரிந்து கொள்வது அவசியம். எனவே, நீங்கள் வாங்கும் டிராவல் இன்சூரன்ஸில் மருத்துவ அவசர உதவி, பயணத்தை கேன்சல் செய்தல் மற்றும் இயற்கை சீற்றம் போன்ற காப்பீடுகள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.
April 30, 2025 4:50 PM IST
இயற்கை சீற்றத்தின்போது பயணிகளுக்கு உதவும் டிராவல் இன்சூரன்ஸ்… என்னென்ன பெனிஃபிட்ஸ் இருக்கு தெரியுமா…?

