இதனைத் தொடர்ந்து, ஏப்.28 ஆம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழப்புகள் ஏற்படத் துவங்கி 3 நாள்கள் கழித்தே மாவட்ட நிர்வாகம் அங்கு வந்ததாகவும், அவர்களது அலட்சியப் போக்கே இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணம் என அக்கிராமவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தினால் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

