2025 மார்ச் மாதத்திற்கான காம்ஸ்கோர் எம்எம்எக்ஸ் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, செய்தி / தகவல் பிரிவில் 183.2 மில்லியன் தனிப் பார்வையாளர்களைப் பெற்று நெட்வொர்க்18 நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது.
அதேபோல சமூக ஊடகம் மற்றும் தளம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பிரிவில் நெட்வொர்க் 18, 315 மில்லியன் தனித்துவப் பார்வையாளர்களைக் கொண்டு, அதன் நெருங்கியப் போட்டியாளரான டைம்ஸ் இன்டர்நெட்டை விட 55% அதிக பயனர்களைக் கொண்டுள்ளது. டைம்ஸ் இன்டர்நெட் 202 மில்லியன் தனித்துவப் பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகம் மற்றும் தளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மொத்த பயனர்களைப் பொறுத்தவரை, News18.com 251 மில்லியன் தனித்துவப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவை (183 மில்லியன்) News18.com முந்தியுள்ளது.
காம்ஸ்கோர் சமூக ஊடக அளவீட்டு அறிக்கையின்படி, நெட்வொர்க்18 அதன் நெருங்கியப் போட்டியாளரை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. ஒட்டுமொத்த சமூக ஊடகப் பயனர்களான 389 மில்லியன் மக்களில் 54% பேரை நெட்வொர்க்18 சென்றடைந்துள்ளது.
சமூக ஊடகம் மற்றும் தளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மொத்த பயனர்களைப் பொறுத்தவரை, News18 வட்டார மொழிப் பிரிவு (இந்திய மொழிகள்) 182 மில்லியன் தனித்துவப் பயனர்களுடன் இந்தப் பிரிவில் முன்னணியில் உள்ளது என்று காம்ஸ்கோர் மார்ச் 2025 அறிக்கை தெரிவிக்கிறது.
நியூஸ்18 இணையதளம் தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அசாமி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா, உருது ஆகிய மொழிகளிலும் செய்தி சேவை வழங்குகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 29, 2025 10:53 AM IST

