Last Updated:
சேலம் உழவர் சந்தைகளில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, மேச்சேரி, மேட்டூர் உள்பட 13 இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ரூ.1.05 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்தைகளில் அன்றாடம் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என விவசாயிகள் நேரடியாக சந்தைப்படுத்துகின்றனர். இச்சந்தைகள் பெருமளவில் நகரப் பகுதிகளில் இயங்கி வருகிறது. இங்கு காய்கறிகள் குறைந்த விலையிலும் தரமானதாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உழவர் சந்தைகள் நகரவாசிகளுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது. இங்கே குறைந்த விலையிலும் தரமானதாகவும் இருப்பதால் நகரவாசிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சித்திரை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் சுவாமிக்கு பூஜை செய்யவும், உழவர் சந்தைகளில் மக்கள் காய்கறி, பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரைவகைகள், பூச ணிக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கினர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவர் சந்தைகளில் காய்கறிகள், 250.02 மெட்ரிக் டன், பழ வகைகள், 49.92 மெட்ரிக் டன், பூக்கள், 0.96 மெட்ரிக் டன் உள்பட மொத்தம் 300.9 மெட்ரிக் டன் அளவுக்கு பொருட்கள் விற்பனை நடந்தது. இதன் மூலம் உழவர் சந்தையில் 1.05 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ரூ.20 லட்சம் ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக மேச்சேரி உழவர் சந்தையில் ரூ.1.72 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை நடந்ததாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலும் விழா காலங்கள் என்றாலே உழவர் சந்திகளில் அதிகளவில் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 29, 2025 2:47 PM IST

