2025 இன்கம் டேக்ஸ் ரிட்டன் ஃபைலிங் எப்போது துவங்கும்?:
இன்கம்டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யும் செயல்முறை சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டேக்சஸ் தகுந்த படிவங்களை வெளியிட ஆரம்பித்த உடனேயே வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் துவங்கும். ITR ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் படிவங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்பட்டு, தாக்கல் செய்வதற்கு கிடைக்கும் என நம்பலாம்.
படிவம் 16 எப்போது கிடைக்கும்?:
படிவம் 16 என்பது மாத வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான டாக்குமெண்டாக இருக்கிறது. இது பணிபுரியும் நிறுவனத்தாரால் வழங்கப்படுகிறது. மேலும் இதில் வழங்கப்பட்ட வருமானம் சம்பந்தப்பட்ட முழு விவரங்கள் மற்றும் TDS போன்ற அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். வருமான வரி விதிகளின்படி, நிறுவனங்கள் படிவம் 16 -ஐ ஜூன் 15, 2025க்குள் வழங்க வேண்டும்.
இன்கம் டேக்ஸ் ரிட்டனை சரியான முறையில் தாக்கல் செய்வதற்கு படிவம் 16 என்பது மிகவும் அவசியம் என்பதால் பெரும்பாலான மாத வருமானம் பெறும் நபர்கள் இந்த டாக்குமெண்ட் பெரும் வரை தங்களுடைய ITR தாக்கல் செய்யும் செயல்முறைகளை ஆரம்பிக்க முடியாது. எனவே மாத வருமானம் பெறும் வரி செலுத்துவோர் பெரும்பாலும் மே அல்லது ஜூன் மாதத்தில் தங்களுடைய ITR -ஐ தாக்கல் செய்வது வழக்கம்.
ITR 2025 தாக்கல் சம்பந்தமான முக்கியமான டெட்லைன்கள்:
இ-ஃபைலிங் போர்டல் திறக்கப்படும் நாள்: ஏப்ரல் 2025 (எதிர்பார்க்கப்படுகிறது)
படிவம் -16 வழங்குவதற்கான கடைசி நாள்: ஜூன் 15, 2025
ITR தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்: ஜூலை 31, 2025
ரீஃபண்ட் தொகையை எப்போது எதிர்பார்க்கலாம்?:
சமீபத்திய சில வருடங்களாகவே வருமானவரித்துறையினர் ரீஃபண்ட் வழங்கும் செயல்முறையை விரைவாக செய்து வருகின்றனர். ஒருவேளை நீங்கள் ரீஃபண்ட் பெறுவதற்கு தகுதி பெற்றவர் என்றால் அதனை நீங்கள் ITR தாக்கல் செய்த 7 முதல் 20 நாட்களில் எதிர்பார்க்கலாம்.
விரைவாக ரீஃபண்ட் பெறுவதற்கு பின் வரும் விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:-
- உங்களுடைய ரிட்டன் சரியாக உள்ளதா என்பதை கவனிக்கவும். ஆதார் அடிப்படையிலான OTP அல்லது பிற முறைகளில் சரி பாருங்கள்.
- உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் ஃப்ரீ வேலிடேட் செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும் அது உங்களுடைய பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து விபரங்களையும் சமர்ப்பிப்பதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.
- ஜூலை 31 முன்பு வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ரீஃபண்ட் விரைவாக கிடைக்கும்.
ITR தாக்கல் செய்யும் பொழுது தேவைப்படும் குறிப்புகள்:-
- தற்போது ITR படிவங்களில் ஏற்கனவே ஒரு சில பெட்டிகள் நிரப்பப்பட்டு தாக்கல் செய்யும் செயல்முறை எளிதாக்கப்பட்டு இருக்கிறது. எனவே ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ள தகவல்கள் சரியானதா என்பதை நீங்கள் வெரிஃபை செய்தால் போதுமானது.
- படிவம் 16 தவிர தேவையான பிற விவரங்களான வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள் மற்றும் டிடக்ஷன் போன்ற தகவல்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
- உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் ஆக்டிவாக, ப்ரீ வேலிடேட் செய்யப்பட்டு உங்களுடைய PAN கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- விரைவாக ஃபைல் செய்வது இறுதி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்க்க உதவும்.
April 29, 2025 2:51 PM IST
2025 இன்கம்டேக்ஸ் ரிட்டன் ஃபைலிங் எப்போது துவங்கும்..? படிவம் 16 எப்போது கிடைக்கும்? – முழு விவரம்!

