உலகின் நூறு சதவிகித முழுமையான இயற்கை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலம் என்ற பெருமையை இந்திய மாநிலம் ஒன்று பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், சுத்தமான, பசுமையான வாழ்க்கையை வாழ்வதிலும் இந்த மாநிலம் முன்னணியில் உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இந்த அற்புதமான மாநிலம், சுற்றுச்சூழலுடன் எவ்வாறு அமைதியாகவும் நிலையானதாகவும் இணைந்து வாழ்வது என்பதை நிரூபித்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த அழகான மாநிலம் எதுவென்றால், அமைதியின் நிலமான “சிக்கிம்” தான். இந்த அற்புதமான சாதனையை சிக்கிம் மாநிலம் எவ்வாறு சாதித்தது? வாருங்கள் பார்ப்போம்.


