Last Updated:
ரிங்கு சிங், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர், ஐபிஎல் 300 ரன்கள் அடையும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்று கூறினார். மஹி மற்றும் ஆண்ட்ரே ரசல் போன்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதாகவும் பகிர்ந்தார்.
ஐபிஎல் இப்போது 300 ரன்களையும் கடக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்துவிட்டது; நாங்களும் அதை செய்ய முடியும் என்று கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ‘ஜென் போல்ட்’ நட்சத்திரமான ரிங்கு சிங், JioHotstar-க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், தனது பினிஷர் பங்கு மற்றும் உடல் நலம், அமைதி பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய ரிங்கு சிங், “நான் பொதுவாக 5 அல்லது 6-ஆவது இடத்தில் பேட் செய்கிறேன். இது எனக்கு பழக்கம் தான். 14 போட்டிகள் உள்ள ஐபிஎல் தொடரில், உடலை நன்றாக பராமரித்து, சரியாக மீண்டெடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். நான் மஹி அண்ணாவுடன் அடிக்கடி பேசுவேன். அவர் என்னை அமைதியாக இருந்து, போட்டியின் நிலைக்கு ஏற்ப விளையாடச் சொல்வார். அமைதியாக இருந்தால், எல்லாம் இயற்கையாக சரியாகிவிடும்.”
அதோடு, பெரியோரிடமிருந்து, குறிப்பாக ஆண்ட்ரே ரசல் போன்றவரிடமிருந்து தன்னுடைய பேட்டிங் கலையை வளர்த்துக்கொள்வது பற்றியும் ரின்கு கூறினார். “ஐபிஎல் விளையாடத் தொடங்கியதில் இருந்து நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். ரஷல் இறுதி ஓவர்களில் எப்படி ஆடுகிறார், எப்படி தனது உடலை பயன்படுத்தி சக்தி உருவாக்குகிறார் என்பதைக் கவனமாக பார்க்கிறேன். அவற்றை பார்த்து கற்றுக்கொள்கிறேன்.

ஐபிஎல் இப்போது 300 ரன்கள் அடையும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்று ரிங்கு சிங் உறுதியாக கூறினார், இதற்கு முந்தைய பெரிய ரன் சேஸ்களை உதாரணமாகக் காட்டினார்: “ஆம், நிச்சயம் முடியும். ஐபிஎல் இப்போது 300 ரன்கள் எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது; கடந்த வருடம் பஞ்சாப் 262 ரன்களை சேஸ் செய்தது. இந்த சீசனில் எல்லா அணிகளும் வலுவாக உள்ளன. யார் வேண்டுமானாலும் 300 ரன்கள் அடிக்க முடியும் என்றார்.
முழு எபிசோடைக் காண இங்கே கிளிக் செய்யவும்:
https://www.hotstar.com/in/sports/cricket/rinku-reveals-his-finishing-secrets/1271408276/watch ஐபிஎல் போட்டிகளை உங்கள் வீடிலிருந்தே காணுங்கள் – நேரலை JioHotstar மற்றும் Star Sports Network இல்!
April 29, 2025 4:13 PM IST


