உயர்தர பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான செயல்பாடு
சச்சின் டெண்டுல்கர் தனது 15 வயதில் வந்தார். ஆனால் அவர் ரஞ்சி, துலீப் ட்ரோஃபி போன்றவற்றில் ஆடிய பிறகு தேசிய அணிக்கு தேர்வானார். பார்த்திவ் படேல் ரஞ்சி அனுபவமில்லாமல் இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடி ஒரு டெஸ்ட் போட்டியை காப்பாற்றினார். ஆனால் இது வேற மாதிரி இன்னிங்ஸ். டி20 கிரிக்கெட்டில், ஒரு 14 வயது பையன், ரஷீத் கான், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற உயர்தர பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

