இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. பயனர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு வசதியாக இருப்பதால் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.
வேலை, பொழுதுபோக்கு இவற்றில் ஏஐ இருப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தெய்வ வழிபாடுகளில் கூட ஏஐ நுழைந்துவிட்டது.
மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோவிலில், ஏஐ மூலம் இயங்கும் தெய்வ சிலையை ( மசு ) அறிமுகப்படுத்தி உள்ளனர்.
மலேசிய தொழில்நுட்ப நிறுவனமான ஐமாசினால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தெய்வம், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவது, வழிகாட்டல் சொல்வது, ஆலோசனை கொடுப்பது என தெய்வத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

