சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தப் போவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், நாடு தழுவிய அளவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடிகளை செயல்படுத்துவதற்கான இறுதி தேதி என்று எதுவும் இல்லை என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தெளிவுப்படுத்தியுள்ளது. மே 1, 2025 முதல் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை செயல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செயல்முறை மே 1, 2025 முதல் தொடங்கப்படும் என்றும், தற்போது செயலில் உள்ள ஃபாஸ்டேக் (FASTag) அடிப்படையிலான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை இது மாற்றும் என்றும் தகவல்கள் பரவி வந்ததால் மத்திய அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
மே 1, 2025 முதல் நாடு தழுவிய அளவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடியை செயல்படுத்துவது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ (NHAI) எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புவதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) அடிப்படையிலான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செய்முறை, ஏப்ரல் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். சில தாமதங்களுக்குப் பிறகு, இது முதலில் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையை விரைவில் அமலுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.
ANPR-FASTag அடிப்படையிலான சுங்கச்சாவடி அமைப்பு
சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்களை தடையின்றி இயக்கவும், மக்களின் பயண நேரத்தைக் குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரெக்கக்னேஷன் (ANPR) மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) அடிப்படையிலான “தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு” செயல்படுத்தப்படும் என்றும் அறிக்கை விளக்குகிறது.
இதையும் படிக்க: New Tax Regime | புதிய வரி விதிப்பு முறை… வரிப்பணத்தை சேமிக்க இத்தனை வழிகள் இருக்கா…?
அறிக்கையின்படி, மேம்பட்ட சுங்கச்சாவடி அமைப்பு, வாகனங்களின் நம்பர் ப்ளேட்டை சோதனை செய்வதன் மூலம், வாகனத்தை அடையாளம் காணும் ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரெக்கக்னேஷன் (ANPR) தொழில்நுட்பத்தையும், ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (RFID) பயன்படுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தற்போதைய ஃபாஸ்டேக் (FASTag) அமைப்பையும் இணைக்கும்.
இதன் மூலம், சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டிய அவசியமின்றி, உயர் செயல்திறன் கொண்ட ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரெக்கக்னேஷன் (ANPR) கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) மூலம் வாகனம் அடையாளம் காணப்பட்டு, அதன்மூலம் சம்பந்தப்பட்ட வாகனத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த செயல்முறைக்கு இணங்கத் தவறுபவர்களுக்கு இ-நோட்டீஸ்கள் அனுப்பப்படும், கட்டணம் செலுத்தத் தவறுபவர்களின் ஃபாஸ்டேக்குக்கு (FASTag) இடைக்கால தடை விதிக்கப்படலாம் மற்றும் வாகனங்கள் (VAHAN) தொடர்பான பிற அபராதங்களும் விதிக்கப்படலாம்.
இதையும் படிக்க: HDFC வங்கி Vs யெஸ் வங்கி Vs ICICI வங்கியின் புதிய FD வட்டி விகிதங்கள்… விரிவான விவரங்கள் இதோ…!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விடும் ஏலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் நிறுவப்படும் ‘ANPR-FASTag-அடிப்படையிலான தடையில்லா சுங்கச்சாவடி அமைப்பை’ செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கச்சாவடி அமைப்பதற்கான ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 18, 2025 4:58 PM IST
சுங்கச்சாவடிகளில் மே 1 முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டணம் வசூலா…? மத்திய அமைச்சகத்தின் விளக்கம் இதுதான்…!

