Last Updated:
Free Tennis Coaching: இந்த பயிற்சியின்போது, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், மற்றும் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும்.
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாமக்கல் மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளைப்பெற ஏதுவாக, விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஸ்டார் அகாடமி செயல்படுத்தப்பட உள்ளது.
டென்னிஸ் விளையாட்டிற்கான ஸ்டார் அகாடமியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வுப்போட்டி 28ஆம் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கதில் நடைபெறவுள்ளது. தேர்வுப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில், 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியின்போது, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், மற்றும் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள பயணச்செலவு அரசு மூலம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: குஜராத்திலிருந்து தூத்துக்குடி வரும் உப்பு… உப்பளத் தொழிலைக் காக்க அரசுக்கு கோரிக்கை…
தேர்வுப்போட்டியில் கலந்துகொள்ள வரும் மாணவ மாணவிகள் ஆதார்கார்டு நகல், பிறப்புச்சான்று நகல், அடையாள அட்டை நகல் ஆகியன கொண்டுவர வேண்டும். இது குறித்து விவரங்களை அறிந்து கொள்ள 74017 03492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Namakkal,Tamil Nadu
April 27, 2025 6:51 PM IST


