Last Updated:
மும்பை மற்றும் லக்னோ அணிகள் திறமையாக விளையாடி வருவதால் கொல்கத்தா அணி கடுமையாக போராடினால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி முதல் ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 7 புள்ளிகளைப் பெற்று 7 ஆம் இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அந்த அணி மீதம் உள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கொல்கத்தா 17 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் செல்லலாம்.
4 போட்டிகளில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகளுடன் மற்ற அணிகளை விடவும் கூடுதல் நெட் ரன் ரேட் இருந்தால், 4 ஆம் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மீதமுள்ள 5 இல் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால் அந்த அணி தொடரிலிருந்து வெளியேறி விடும்.
தற்போது தற்போது குஜராத், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளைப் பெற்று முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் திறமையாக விளையாடி வருவதால் கொல்கத்தா அணி கடுமையாக போராடினால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.
இதனால் அடுத்து வரக்கூடிய போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
April 27, 2025 8:45 PM IST


