• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

pahalgam attack: மீண்டும் சர்ச்சையாக பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
pahalgam attack: மீண்டும் சர்ச்சையாக பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 27, 2025 7:38 PM IST

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு தேசக் கோட்பாட்டை பேசி, காஷ்மீர் பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” எனக் கூறியுள்ளார்.

News18News18
News18

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை இரு தேசக் கோட்பாட்டை வலியுறுத்தி, முஸ்லிம்களும் இந்துக்களும் இரண்டு தனித்தனி நாடுகள் என்று பேசியுள்ளார். புலம்பெயர்ந்தோர் நிகழ்வில் காஷ்மீர் பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” என்று அவர் கூறிய சில நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இப்படி பேசியுள்ளார்.

“இரு தேசக் கோட்பாடு முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று அல்ல, இரண்டு தனித்தனி நாடுகள் என்ற அடிப்படை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், சிந்தனை மற்றும் அபிலாஷைகள் – வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்” என கைபர்-பக்துன்க்வாவின் காகுலில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் (பிஎம்ஏ) நடந்த பயிற்சி அணிவகுப்பில் முனீர் பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டு, பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் அவர் இதுபோல் பேசியுள்ளார். “நமது முன்னோர்கள் பாகிஸ்தானை உருவாக்க மகத்தான தியாகங்களைச் செய்தனர். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு பாகிஸ்தானியர்கள் மத்தியில் உரையாற்றிய முனீர் இதே போன்ற கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். “பாகிஸ்தானின் கதையை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும், அப்போதுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நம் முன்னோர்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நம்பினர் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்” என்று அவர் கூறினார். மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் அனைத்தும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிரித்து, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவால் ஆதரிக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்தன என்றும் அவர் கூறினார்.

அதே உரையின் போது, ​​காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் பாரம்பரிய நிலைப்பாட்டை முனீர் மீண்டும் வலியுறுத்தினார், “எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – அது எங்கள் கழுத்து நரம்பு, அதை நாங்கள் மறக்க மாட்டோம். எங்கள் காஷ்மீர் சகோதரர்களை அவர்களின் வீரமிக்க போராட்டத்தில் விட்டுவிட மாட்டோம்.” என பேசியிருந்தார்.

First Published :

April 27, 2025 7:04 PM IST

Read More

Previous Post

“தோனி விளையாடுவது பிராண்ட், பெயர், ரசிகர்களுக்காகவே!” – சுரேஷ் ரெய்னா | Dhoni plays for brand name and fans in ipl 2025 says Suresh Raina

Next Post

நாடு முழுவதும் உள்ள கோயில்களில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு அமைச்சகம் ஆதரவளிக்கும் – Malaysiakini

Next Post
நாடு முழுவதும் உள்ள கோயில்களில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு அமைச்சகம் ஆதரவளிக்கும் – Malaysiakini

நாடு முழுவதும் உள்ள கோயில்களில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு அமைச்சகம் ஆதரவளிக்கும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin