Last Updated:
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களுக்கு ஆரஞ்ச் நிற தொப்பியும், விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படும்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட் எடுத்தவர்கள் (Orange Cap, Purple Cap Holder) யார் என்பது குறித்து பார்க்கலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை 44 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 8 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. குஜராத் மற்றும் டெல்லி அணிகளை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் 9 போட்டிகளில் விளையாடி உள்ளது.
அவைகளின் வெற்றி தோல்வி அடிப்படையில் குஜராத், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் ஒட்டுமொத்தமாக 11 புள்ளிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் அணி நான்காம் இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களுக்கு ஆரஞ்ச் நிற தொப்பியும், விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படும். இதற்கான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் 10 போட்டிகளில் விளையாடி 427 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் எடுத்து 2 ஆம் இடத்தில் உள்ளார். சராசரி 52.12 ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் 82. இவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணியின் விராட் கோலி இருக்கிறார். 9 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 392 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 73 ரன்கள்.
லக்னோ அணியின் நிகோலஸ் பூரன் 9 போட்டிகளில் விளையாடி 377 ரன்கள் எடுத்து 4 ஆம் இடத்தில் உள்ளளார். அதிகபட்ச ஸ்கோர் 87 ரன்கள்.
இதையும் படிங்க – வங்கி வேலையை விட்ட தந்தை..! மன அழுத்தம்..! சாதித்து காட்டிய ஆயுஷ் மாத்ரேவின் கதை
அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா 8 போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் விட்டுக் கொடுத்து 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆர்சிபி அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 9 போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் விட்டுக் கொடுத்து 16 விக்கெட்டுகளை கைப்பற்றி 2 ஆம் இடத்தில் உள்ளார்.
April 27, 2025 5:46 PM IST


