வருமான வரிச்சட்டம் 1961-இன் கீழ், ஒரு சில முதலீடுகள், சேமிப்புகள் மற்றும் செலவுகளுக்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. நீங்கள் முதலீடு செய்யும் ஒரு சில குறிப்பிட்ட பொருளாதாரக் கருவிகளில் பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
எனினும், பழைய வரி விதிப்பு முறையில் வரிகளைச் சேமிப்பதற்கான எக்கச்சக்கமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஆகவே, இந்தப் பதிவில் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வரிப்பணத்தை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பது தொடர்பான சில குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
நிலையான டிடக்ஷன்:
புதிய வரி விதிப்பு முறையின் கீழ், நிலையான டிடக்ஷன் என்பது 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே, பழைய வரி விதிப்பு முறையில், இந்த நிலையான டிடக்ஷன் என்பது இன்னும் 50,000 ரூபாயாகவே உள்ளது.
NPS திட்டத்தில் நிறுவனத்தின் பங்களிப்புக்கான வரிவிலக்கு – பிரிவு 80CCD(2):
இந்த வரி விலக்கு மாத வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஃப்ரீலான்சர்கள் அல்லது சுய தொழில் செய்பவர்களால் இதனைப் பயன்படுத்த முடியாது. ஒருவேளை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுடைய NPS அக்கவுண்டில் குறிப்பிட்ட தொகையை பங்களித்திருக்கும் பட்சத்தில், அதனைக் கணக்கு காட்டி நீங்கள் வரி விலக்கு கோரலாம்.
அரசு ஊழியர்களுக்கு: 14% வரை பேசிக் மற்றும் DA
தனியார் துறை ஊழியர்களுக்கு: 10% வரை
அக்னிவீர் கார்பஸ் ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கான வரி விலக்கு – பிரிவு 80CCH(2):
அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீர் மற்றும் அரசு செய்யும் பங்களிப்புகள் ஆகிய இரண்டுக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற்று வரும் நபர் அல்லது நாமினி ஆகிய இருவரும் வரிவிலக்கு கோரலாம். இந்த வரி விலக்கு இரண்டு வரி விதிப்பு முறையிலும் கிடைக்கிறது.
ஃபேமிலி பென்ஷன் திட்டத்திற்கான வரி விலக்கு – பிரிவு 57(iia):
ஒரு ஊழியரின் குடும்பம் அவருடைய இறப்புக்குப் பிறகு பென்ஷன் பெற்று வரும் பட்சத்தில், அதற்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: HDFC வங்கி Vs யெஸ் வங்கி Vs ICICI வங்கியின் புதிய FD வட்டி விகிதங்கள்… விரிவான விவரங்கள் இதோ…!
போக்குவரத்து மற்றும் பயணப்படி:
மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தங்களுடைய வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில், ஒரு மாதத்திற்கு 3200 ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம்.
பயணப்படி:
அலுவலக வேலை நிமித்தமாக வெளியில் செல்லும்போது ஆகக்கூடிய செலவுகளுக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
புதிய வரி விதிப்பு முறையில் பிரிவு 10-ன் கீழ் ஒரு சில வரி விலக்குகள்: இதற்கு முன்பு புதிய வரி விதிப்பு முறையில் பிரிவு 10-ன் கீழ் எந்த ஒரு வரி விலக்கும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது ஒரு சில பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
விருப்ப ஓய்வு (VRS): 5 லட்சம் ரூபாய் வரை டிடக்ஷன் கொடுக்கப்படுகிறது.
வெகுமதி: அரசு ஊழியர்களுக்கு முழுமையாக வரி விலக்கு வழங்கப்படுகிறது; தனியார் ஊழியர்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து வரி விலக்கு கொடுக்கப்படுகிறது.
இதையும் படிக்க: வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு… கனரா வங்கி வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!
விடுப்பைப் பணமாக்குதல்:
பணி ஓய்வின்போது அல்லது வேலையை ராஜினாமா செய்யும்போது, 25 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கும் மேற்பட்ட தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
ஒருவேளை நீங்கள் வழக்கமான வரி சேமிப்பு ஆப்ஷன்களில் ஒரு சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வந்த பட்சத்தில், புதிய வரி விதிப்பு முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 4:20 PM IST

