இதுவரை 44 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 8 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. குஜராத் மற்றும் டெல்லி அணிகளை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் 9 போட்டிகளில் விளையாடி உள்ளது.
முதல் 4 அணிகள்
அவைகளின் வெற்றி தோல்வி அடிப்படையில் குஜராத், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் ஒட்டுமொத்தமாக 11 புள்ளிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் அணி நான்காம் இடத்தில் உள்ளது.
மும்பை கம்பேக்
முதல் ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை அணி அதிரடியாக எழுச்சி பெற்று கடைசியாக நடந்த 4 போட்டிகளிலும் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் சூப்பர் பார்முக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதனைத் தவிர லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியும் 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னைக்கு வாய்ப்பு குறைவு
அடுத்தடுத்த இடங்களில் கொல்கத்தா சன்ரைசர்ஸ், ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் 9 மற்றும் 10- ஆவது இடத்தை பிடித்திருக்கின்றன. இவை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தளவில் அந்த அணிக்கு மீதம் இருக்கும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியும்.
இதே போன்ற சூழல்தான் கொல்கத்தா அணிக்கும் ஏற்பட்டிருக்கிறது. லக்னோவை பொறுத்த அளவில் மீதமுள்ள 5 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்று மும்பை அணிக்கு எதிராக இன்று நடைபெறக்கூடிய லீக் போட்டி லக்னோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ப்ளே ஆஃப் தகுதி யாருக்கு?
தற்போதைய சூழல் படி முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதன் அடிப்படையில் அந்த இடங்களுக்கு குஜராத், டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், மும்பை மற்றும் லக்னோ ஆகிய 6 அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க – விராட் கோலி -அனுஷ்கா சர்மா தம்பதி லண்டனுக்கு குடிபெயர்ந்தது ஏன்? வெளியான தகவல்
இன்னும் ஆழமாக பார்த்தால் பஞ்சாப், மும்பை, லக்னோ ஆகிய அணிகளில் 2 அணிகள் வெளியேறக் கூடும். மேலும் முதல் 3 இடங்களை பிடித்துள்ள குஜராத், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு ஆன அதிகப்படியான வாய்ப்புகளை பெற்றுள்ளன. வரும் வார இறுதிக்குள் பிளே ஆப் செல்லும் அணிகள் ஓரளவு உறுதி செய்யப்படும்.
April 27, 2025 3:23 PM IST

