• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு | Varanasi Collector Rajalingam promoted to Zonal Commissioner

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு | Varanasi Collector Rajalingam promoted to Zonal Commissioner
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தமிழகத்​தின் தென்​காசி மாவட்ட கடையநல்​லூரை சேர்ந்த சுப்​பையா – மலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் எஸ்​.​ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி.​யில் வேதி​யல் பிரி​வில் 2003-ல் பட்​டம் பெற்​றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.​யின் அலிகரில் பணியை தொடங்​கி​னார். பின்​னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரி​விலேயே பணி​யில் சேர்ந்​தார். ஐஏஎஸ் பணி​யில் அவுரய்​யா, சோன்​பத்​ரா, குஷி நகர் மற்​றும் சுல்​தான்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் ஆட்​சி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

கடந்த நவம்​பர் 2022-ல் வாராணசி​யின் 58-வது ஆட்​சி​ய​ராக ராஜலிங்​கத்தை முதல்​வர் ஆதித்​ய​நாத் நியமித்​தார். இந்த மாவட்​டத்​தில் ஆட்​சி​ய​ராக நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்​டரை ஆண்டு வாராணசி நிர்​வாகத்​தில் 3 காசி தமிழ்ச் சங்​கமங்​கள் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. பிரதமர் உத்​தர​வின் பேரில் பல கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் ராஜலிங்​கம் அமல்​படுத்​தி​னார். இதனால், பிரதமர் மோடி​யின் அபி​மானத்தை பெற்​றார். பின்​னர் பிரதமர் மோடி நேரடி​யாக​வும் வீடியோ கான்​பரன்​சிங் கூட்​டங்​களி​லும், ‘மிஸ்​டர் ராஜலிங்​கம்’ என்று பெயரைக் குறிப்​பிட்டு அழைக்​கும் அளவுக்கு நம்​பிக்​கைக்கு உரிய​வ​ராக செயல்​பட்​டார்.

இந்​நிலை​யில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. எனினும், மகா கும்​பமேளா, பல கோடி பக்​தர்​கள் வரு​கை, காசி தமிழ்ச் சங்​கமம் 3.0 நிகழ்ச்சி உள்​ளிட்ட முக்​கிய பணி​கள் இருந்​த​தால் ராஜலிங்​கத்​துக்கு பதவி உயர்​வுக்​கான பணி ஒதுக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், அந்​தப் பணி​களை அவர் சிறப்​பாக செய்து முடித்​த​தால், தற்​போது அவர் வாராணசி​யிலேயே மண்டல ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். வாராணசி மண்​டலத்​தின் 4 மாவட்ட ஆட்​சி​யர்​களின் பணி​களை மேற்​பார்​வை​யிடும் இந்த ஆணை​யர் பணி​யில் நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவர்​தான்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராஜலிங்​கம் கூறும்​போது, ‘‘பு​திய பணி​யில், முக்​கிய​மாக வாராணசி​யில் அமலாக்​கிய ரூ.49,000 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை கண்​காணிக்​கும் பணி​யும் அடங்​கி​யுள்​ளது. அத்​துடன் வாராணசி வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் என்ற கூடு​தல் பணி​யும் உள்​ளது. இந்த பதவி​யில், மண்​டலத்​தின் நகரங்​களை விரிவடைய செய்​வது, வாராணசி போக்​கு​வரத்தை அடுத்​தக்​கட்​டத்​துக்கு கொண்டு செல்​வது, நகரின் திடக்​கழிவு மேலாண்மை உள்​ளிட்ட பல பணி​களை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளேன். காசி விஸ்​வ​நாதர் கோயில் அறக்​கட்​டளை தலை​வ​ராக பக்​தர்​களுக்​கான வசதி​களை மேம்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளேன். அதன் ஆலோ​சனை​களை​யும் வரவேற்​கிறேன்’’ என்​றார். ராஜலிங்​கத்​துக்கு மனை​வி நித்​யா மற்​றும்​ மகன்​ வேலன்​ ஆகியோர்​ உள்​ளனர்​.



Read More

Previous Post

“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”

Next Post

‘சாய் கிஷோர் சிறப்பாக செயல்படுகிறார்’ – டேனியல் வெட்டோரி பாராட்டு | srh coach daniel vettori praised sai kishore ipl 2025

Next Post
‘சாய் கிஷோர் சிறப்பாக செயல்படுகிறார்’ – டேனியல் வெட்டோரி பாராட்டு | srh coach daniel vettori praised sai kishore ipl 2025

‘சாய் கிஷோர் சிறப்பாக செயல்படுகிறார்’ - டேனியல் வெட்டோரி பாராட்டு | srh coach daniel vettori praised sai kishore ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin