Last Updated:
பிரதமர் மோடி 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆட்டோமொபைல், காலணி துறையில் உற்பத்தி, ஏற்றுமதி உச்சம். அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆட்டோமொபைல், காலணி தயாரிப்பு துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி புதிய உச்சம் தொட்டிருப்பதாகக் கூறினார். இந்த துறைகளில் அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகும் என்றார்.
அனைத்துத்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகக் கூறிய பிரதமர், குடிமைப் பணி தேர்வில் தேர்வான முதல் ஐந்து இடங்களில் மூன்று பேர் பெண்கள் என்றும் குறிப்பிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 8:57 AM IST


