சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் முழுமையாக குளிரூட்டப்பட்ட புதிய சேமிப்பு கிடங்கு ஒன்று துவாஸில் தயாராகி வருகிறது.
ஜப்பானிய தளவாட நிறுவனமான சாங்க்யூவின் (Sankyu) சிங்கப்பூர் துணை நிறுவனம் துவாஸில் சுமார் 57,000 சேமிப்புத் தட்டுகளுடன் (storage pallets) கூடிய, முழுமையாக குளிரூட்டப்பட்ட புதிய சேமிப்பு கிடங்கு ஒன்றை உருவாக்குகிறது.
சிங்கப்பூரில் வேலை என்றாலே பின்னால் செல்லும் ஒரு கூட்டம் – என்னத்த சொல்ல!
சுமார் 38,380 சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு மாடி கட்டுமானத்தில் தயாராகி வரும் அந்த கிடங்கு, வரும் 2026 ஜனவரியில் முழுமையாக செயல்படும்.
இதன் மூலம் சுமார் 170 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று “சாங்க்யூ சிங்கப்பூர்” நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
துவாஸ் விநியோக நிலையம் (Tuas Distribution Hub) என்று அழைக்கப்படும் அந்த கிடங்கு, முழு குளிரூட்ட வசதியுடன் கூடிய வெப்பநிலை கட்டுப்பாடு, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தொழில்துறை தரத்திற்கு ஏற்ற சரக்கு மேலாண்மை அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என சொல்ல்லப்பட்டுள்ளது.
மேலும், கிடங்கில் தானியங்கி ஃபோர்க்லிஃப்ட் சாதனங்களுடன் கூடிய சேமிப்பு அம்சங்கள் உள்ளன.
துவாஸ் தொழிற்பேட்டையில் அந்த விநியோக நிலையம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது புதிதாக மேம்படுத்தப்படும் துவாஸ் மெகா துறைமுகத்துக்கு அருகே அது உருவாகிறது.
வாடிக்கையாளர்கள் TDH தொடர்பான வர்த்தக முடிவுகளை எடுக்க போதுமான நேரத்தை வழங்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் 25 அன்று அது அதிகாரபூர்வமற்ற வகையில் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிராவில் முதல் ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன்: ஒரே வெற்றி – லைப் செட்டில்!

