இருப்பினும், அவர்களில் சிலவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் தில்லிக்கு அனுப்பப்பட்டனர். பலியானவர்கள் ரேஷாம் (60), பிரேம் (60), ரத்னா (40), பிஸ்தா (30), ஜெய்தேய் (40), சதன்பதி (30), ஆஸ் முகமது (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து நிதி உதவிகளும் வழங்கப்படும் என்று நுஹ் மாவட்ட ஆணையர் விஷ்ரம் குமார் மீனா தெரிவித்தார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

