• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்.. சென்னை அணியை போராடி வென்றது ஐதராபாத் அணி..

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்.. சென்னை அணியை போராடி வென்றது ஐதராபாத் அணி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 11:35 PM IST

9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றி 7 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கினர். ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். சாம் கரன் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஆயுஷ் மாத்ரே பவுண்டரிகளாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

19 பந்துகளில் 6 சிக்சருடன் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இணைந்த ரவிந்திர ஜடேஜா – டெவால்ட் ப்ரூவிஸ் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். 4 சிக்சர்களை விளாசி ப்ரூவிஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் 42 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷிவம் துபே 12 ரன்னும், தீபக் ஹூடா 22 ரன்னும் எடுத்தனர்.

தோனி 6 ரன்களில் வெளியேற 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், உனட்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கிளாசன் 7 ரன்களில் வெளியேறினார்.

பொறுப்பாக ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். அனிகேட் வர்மா 19 ரன்களில் வெளியேறியபோது ஐதராபாத் அணி 13.5 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிங்க – BCCI | “பாகிஸ்தான் அணியுடன் போட்டிகள் இல்லை…” – பிசிசிஐ துணைத் தலைவர்

அதன்பின்னர் இணைந்த நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மெண்டிஸ் 32 ரன்களும், நிதிஷ் குமார் 19 ரன்களும் சேர்க்க 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் ஐதராபாத் அணி தரவரிசையில் 8 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றி 7 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது.

First Published :

April 25, 2025 11:35 PM IST

Read More

Previous Post

“பாக். பிரதமர் கருத்துக்கு முக்கியத்துவம் தர விரும்பவில்லை” – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிரடி | Don’t want to give importance to their statements says Omar Abdullah on Pak PM Shehbaz Sharif’s remarks

Next Post

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் – நடந்தது என்ன? | At least four killed, over 500 people injured in Iran port explosion

Next Post
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் – நடந்தது என்ன? | At least four killed, over 500 people injured in Iran port explosion

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் - நடந்தது என்ன? | At least four killed, over 500 people injured in Iran port explosion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin