Last Updated:
போப் பிரான்சிஸ் மறைந்த நிலையில் புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்க உலகம் முழுவதிலிருந்தும் கார்டினல்கள் கூடுவார்கள்.
உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவ மதத்தில் உள்ள பல பிரிவுகளில் ஒன்று கத்தோலிக்கம். உலகெங்கும் உள்ள இந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் செயல்படுகிறார்.
இந்த கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மரணம் அடைந்த நிலையில், அவரது மரணத்திற்கு பிறகு கத்தோலிக்க திருச்சபையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து தேவசகாய மவுண்ட் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு தந்தை லியோன் டென்சன் கூறுகையில், “போப் ஆண்டவர் பிரான்சிஸ் மரணம் இந்த செய்தி உலகையே உலுக்குகிற செய்தியாக அமைந்துள்ளது.
காரணம் திருத்தந்தை அவர்கள் தம் பணியால், சிந்தனையால் மற்றும் வாழ்க்கை முறையால் ஒரு மாபெரும் அதிர்வை மானுட சமூகத்திற்கு வழங்கி உள்ளார். திரு அவையை பொறுத்தவரையில் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை அவர் செய்துள்ளார். அவர் திரு அவைக்கு புதிய பாதையை வகுத்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதையும் படிங்க: SI Exam: உதவி ஆய்வாளர் தேர்வுக்கு வெற்றிப்பாதை… குமரி மாவட்ட காவல்துறை வழங்கும் இலவச பயிற்சி…
போப்பாண்டவர் மரணத்திற்கு பிறகு மரபு ரீதியாக சில வடிவங்கள் திருச்சபையில் பின்பற்றப்படுகிறது திருத்தந்தை இறந்துவிட்டால் அதன் பிறகு தான் அவரது இறப்பை உறுதிப்படுத்தி உலகிற்கு அறிவிப்பார்கள். கர்தினல்கள் அவரது இயற்பெயரை சொல்லி மூன்று முறை அழைப்பார்கள். பின்பு அவரது இறப்பை உறுதி செய்து அறிவிப்பார்கள். அதோடு அவர்கள் போப் ஆண்டவர் ஆவணங்களில் கையெழுத்து இட பயன்படும் பிஸ்டர் மேன் எனும் ரிங்கை சுத்தியல் கொண்டு உடைப்பார்கள்.
அதன் பின்பு அவர் இறந்த இடத்தை முழுவதுமாக சுத்தி சீல் வைத்து விடுவார்கள். அதன் பிறகு தான் அவரது இறப்பை உறுதிப்படுத்தி உலகிற்கு அறிவிப்பார்கள் பின்னர் உலகெங்கிலும் உள்ள கார்டினல்கள் வரவழைக்கப்பட்டு போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கு முடிவடைந்த சில நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றிணைந்து புதிய போப் ஆண்டவரே தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு சில நாட்கள் கூட எடுத்துக் கொள்ளும்.
புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகெங்கிலும் உள்ள கார்டினல்கள் ஒன்று கூடுவார்கள். அவர்கள் ஒன்று கூடும் இடத்திற்கு பெயர் சிக்ஸ்த்டேன் பேராலயம் என்று அழைக்கப்படுகிறது. புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்விற்கு கான் கிளைவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பேராலயத்திற்குள் சென்றவுடன் அவர்களுக்கும் வெளி உலகிற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெறும்.
இதையும் படிங்க: நீலகிரியில் சம்மருக்கு வரிசைக் கட்டும் வாகனங்கள்… பார்க்கிங் இல்லாமல் பரிதவிக்கும் பயணிகள்…
பின்னர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பார்கள். இதற்காக உலகெங்கிலும் 115 கார்டினல்கள் ரோம் வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். ஒன்பது நாள் துக்கம் அனுசரிக்கப்பட்ட பின்னர் 28ஆம் தேதி முதல் புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 26, 2025 11:35 AM IST

