• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒருவரால் ஒன்றுக்கு மேற்பட்ட PPF அக்கவுண்டை திறக்க இயலுமா…???

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஒருவரால் ஒன்றுக்கு மேற்பட்ட PPF அக்கவுண்டை திறக்க இயலுமா…???
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 11:15 AM IST

உங்களுடைய அக்கவுண்ட் மற்றும் மைனர் அக்கவுண்ட் ஆகிய இரண்டிலும் நீங்கள் செய்யும் முதலீடு ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

News18News18
News18

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்று அழைக்கப்படும் PPF என்பது பிரபலமான ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாக அமைகிறது. இது குறிப்பாக இந்திய அரசு மூலமாக ஆதரிக்கப்படுகிறது. இதன் மூலமாக பல்வேறு வரிப் பலன்கள் கிடைப்பதோடு, ரிஸ்க் இல்லாத ரிட்டன்கள் பெறப்படுகிறது. எனினும் ஒரு தனிநபர் எத்தனை PPF அக்கவுண்டுகளை திறக்க முடியும் என்பது குறித்து பேசும் பொழுது இது சம்பந்தமாக ஒரு சில விதிகள் உள்ளன.

ஒரு நபருக்கு ஒரு PPF அக்கவுண்ட் மட்டுமே: PPF திட்டம், 1968 -ன் கீழ் உள்ள விதிகளின் அடிப்படையில், ஒரு தனிநபர் தன்னுடைய பெயரில் ஒரே ஒரு PPF அக்கவுண்ட்டை மட்டுமே திறப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார். பல எண்ணிக்கையிலான PPF அக்கவுண்டுகளை உங்களுடைய பெயரில் நீங்கள் திறக்க இயலாது. அது வெவ்வேறு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களாக கூட இருக்கலாம், அவ்வாறு செய்ய நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். ஒருவேளை நீங்கள் பல்வேறு அக்கவுண்டுகளை திறந்து இருப்பது தெரிய வந்தால் முதல் அக்கவுண்டுக்கு பிறகு நீங்கள் திறந்த அக்கவுண்டுகள் அனைத்தும் செயலற்றதாக கருதப்படும். மேலும் அதில் நீங்கள் செய்த டெபாசிட்டுகளில் திரும்பி தரப்படாது.

மைனர்களுக்கான PPF அக்கவுண்டுகள்: உங்களுடைய பெயரில் உங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட PPF அக்கவுண்ட்டை திறக்க முடியாவிட்டாலும், மைனர் குழந்தைக்காக நீங்கள் ஒரு பாதுகாவலரை போல செயல்பட்டு, தனியாக ஒரு PPF அக்கவுண்ட்டை திறக்கலாம். எனினும் உங்களுடைய அக்கவுண்ட் மற்றும் மைனர் அக்கவுண்ட் ஆகிய இரண்டிலும் நீங்கள் செய்யும் முதலீடு ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வேலை ஒரு நிதியாண்டில் உங்களுடைய PPF அக்கவுண்டில் நீங்கள் 1 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யும் பட்சத்தில், அதே நிதியாண்டில் மைனர் குழந்தை PPF அக்கவுண்டில் 50,000 ரூபாய் வரை மட்டுமே உங்களால் முதலீடு செய்ய முடியும்.

ஜாயிண்ட் PPF அக்கவுண்டுகள்: PPF அக்கவுண்ட் பொருத்தவரை, இவை தனிநபர் கணக்குகள் ஆகும். மேலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் இதில் அனுமதிக்கப்படாது. இந்த விதியானது வழக்கமான மற்றும் மைனர் அக்கவுண்டுகள் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.

இரண்டாவது PPF அக்கவுண்ட் திறந்து விட்டால் என்ன ஆகும்?: தெரியாமல் நீங்கள் இரண்டாவதாக ஒரு PPF அக்கவுண்ட்டை திறந்து விட்டால், அது குறித்து நீங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்திடம் தெரிவிப்பது அவசியம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுடைய இரண்டாவது அக்கவுண்ட்டை மூடி, நீங்கள் செய்த முதலீட்டு தொகையை மட்டும் திருப்பிக் கொடுப்பார்கள். அதற்கு எந்த ஒரு வட்டியும் வழங்கப்படாது.

ஒரே ஒரு அக்கவுண்ட்டை மட்டுமே திறக்கவும்: எனவே PPF அக்கவுண்டிற்கான விதிகளுக்கு உட்பட்டு, ஒரே ஒரு PPF அக்கவுண்ட்டை மட்டுமே திறப்பது அவசியம். வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C -ன் கீழ் நீங்கள் இந்த திட்டத்திற்கான பலன்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மைனர் அக்கவுண்டுக்கு பாதுகாவலராக இருந்து மொத்த முதலீட்டு மதிப்பு ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 25, 2025 11:12 AM IST

Read More

Previous Post

கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் | India Head Coach Gautam Gambhir Requests Action Over Death Threat

Next Post

யுனெஸ்கோ படைப்பாற்றல் நகர அந்தஸ்தைப் பெற கோலாலம்பூர் ஆர்வம் | Makkal Osai

Next Post
யுனெஸ்கோ படைப்பாற்றல் நகர அந்தஸ்தைப் பெற கோலாலம்பூர் ஆர்வம் | Makkal Osai

யுனெஸ்கோ படைப்பாற்றல் நகர அந்தஸ்தைப் பெற கோலாலம்பூர் ஆர்வம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin