ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியிலிருந்த நான்கு சந்தேக நபர்களில், மூன்று பேரை இந்திய பொலிஸ் பெயரிட்டுள்ளது.
அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாவது நபர் காஷ்மீரைச் சேர்ந்தவர் எனவும், நான்காவது நபர் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மூவரும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர் இ தாய்பாவைச் சேர்ந்தவர்கள் என இந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். (a)


