Last Updated:
பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து தீவிரவாதிகள் பெயரில் ஈமெயில் வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பெகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக விஐபிகளுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஈமெயில் ஒன்று வந்துள்ளது.
‘ஐ எஸ் ஐ எஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் வந்துள்ள இந்த ஈமெயில் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து கம்பீருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கௌதம் கம்பீர் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க – Simla Agreement : சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? ரத்து செய்வதால் யாருக்கு பாதிப்பு?
தனக்கு வந்த ஈமெயில் குறித்து கௌதம் கம்பீர் நேற்று டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கௌதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்திருக்கும் ஈமெயில் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
April 24, 2025 8:46 PM IST


