• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை: வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை | mumbai indians to play with csk in wankhede today match preview ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை: வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை | mumbai indians to play with csk in wankhede today match preview ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான மும்பை இந்​தி​யன்ஸ் – சிஎஸ்கே அணி​கள் மோதுகின்​றன.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக டெல்லி கேப்​பிடல்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​களை வீழ்த்​திய உற்​சாகத்​தில் இன்​றைய ஆட்​டத்தை சந்​திக்​கிறது. மறு​புறம் தோனி தலை​மையி​லான சிஎஸ்கே அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது.

சீசனை வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அணி அதன் பின்​னர் தொடர்ச்​சி​யாக 5 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்த நிலை​யில் கடைசி​யாக லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. இந்த வெற்றி சிஎஸ்​கேவுக்கு நம்​பிக்​கையை கொடுத்துள்​ளது. காயம் காரண​மாக ருது​ராஜ் கேப்​டன் பதவியில் இருந்து வில​கிய நிலை​யில் தோனி பொறுப்​பேற்​றதும் சில மாற்​றங்​களை கொண்டு வந்​தார்.

லக்னோ அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பேட்​டிங்​கில் ஷேக் ரஷீத் அறி​முக வீர​ராக இடம்பெற்று 19 பந்​துகளில் 27 ரன்​கள் சேர்த்து கவனம் ஈர்த்​தார். இதே​போன்று அன்​ஷுல் கம்​போஜ், அதிரடி பட்​டாளங்​கள் நிறைந்த லக்னோ அணிக்கு எதி​ராக சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தார். முக்​கிய​மாக அபாயகர பேட்​ஸ்​மே​னான நிகோலஸ் பூரனை விரை​விலேயே ஆட்​ட​மிழக்​கச் செய்​திருந்​தார். இவர்​கள் இரு​வரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும்.

ரச்​சின் ரவீந்​தி​ரா, ஷிவம் துபே ஆகியோர் பார்​முக்கு திரும்பி இருப்​பது பேட்​டிங்​குக்கு பலம் சேர்க்​கக்​கூடும். தோனி மீண்​டும் பினிஷர் ரோலை சிறப்​பாக செய்​யத் தொடங்​கி உள்​ளது அணி​யின் முன்​னேற்​றத்​துக்கு சீரான வகை​யில் உதவக்​கூடும். 5 ஆட்​டங்​களில் 9.16 சராசரி​யுடன் 55 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்ள ராகுல் திரி​பாதி மற்​றும் 118 ரன்​கள் எடுத்​துள்ள விஜய் சங்​கர் ஆகியோ​ரும் பொறுப்பை உணர்ந்து மட்​டையை சுழற்​றி​னால் அணி​யின் பேட்​டிங் கூடு​தல் வலுப்​பெறும்.

அணி​யில் புதி​தாக இணைந்​துள்ள டெவால்ட் பிரே​விஸ், ஆயுஷ் மகத்ரே ஆகியோ​ருக்கு நேரடி​யாக விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்​கப்​படு​வது அரி​தாகவே இருக்​கக்​கூடும். எனினும் ராகுல் திரி​பா​தி​யின் மோச​மான பார்ம் காரண​மாக அவர் நீக்​கப்​பட்டு டெவால்ட் பிரே​விஸ் களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

ஏனெனில் கடந்த சீசன்​களில் டெவால்ட் பிரே​விஸ், மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக விளை​யாடி உள்​ளார். பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் கலீல் அகமது சீரான செயல் திறனை வெளிப்​படுத்தி வரு​கிறார். அவருக்கு உறு​துணை​யாக அன்​ஷுல் கம்​போஜ் செயல்​பட்டு வரு​கிறார். சுழலில் 12 விக்​கெட் கைப்​பற்​றி​யுள்ள நூர் அகமது மும்பை பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

மும்பை அணி, ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வழக்​கத்​துக்கு மாறாக செயல்​பட்ட வான்​கடே மைதானத்​தின் தன்​மையை சரி​யாக கணித்து பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்​டது. டிரென்ட் போல்ட், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோ​ரும் ரித​முக்கு திரும்பி உள்​ளனர். அதேவேளை​யில் ஆல்​ர​வுண்​ட​ராக ஹர்​திக் பாண்​டி​யா​வுடன் வில் ஜேக்​ஸும் சிறந்த பங்​களிப்பை வழங்கி வரு​கிறார். பிர​தான சுழற்​பந்து வீச்​சாள​ரான கரண் சர்மா கடந்த ஆட்​டத்​தில் காயம் அடைந்​திருந்​தார். இதனால் அவருக்கு பதிலாக விக்​னேஷ் புதூர் களமிறக்​கப்​படக்​கூடும்.

பேட்​டிங்​கில் ரியான் ரிக்​கெல்​டன் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கிறார். ரோஹித் சர்மா கடந்த ஆட்​டத்​தில் 16 பந்​துகளில் 26 ரன்​கள் விளாசி பார்​முக்கு திரும்​பியிருப்​பது அணிக்கு கூடு​தல் பலம் சேர்க்​கக்​கூடும். சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, நமன்​திர் ஆகியோ​ரும் சிஎஸ்கே பந்து வீச்​சாளர்​களுக்கு தங்​களது தாக்​குதல் ஆட்​டத்​தால் நெருக்​கடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

நடப்பு சீசனில் மும்பை – சிஎஸ்கே அணி​கள் 2-வது முறை​யாக மோதுகின்​றன. கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்​கே​விடம் 4 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் மும்பை அணி தோல்வி அடைந்​திருந்​தது. இந்த தோல்விக்கு இன்​றைய ஆட்​டத்​தில் பதிலடி கொடுக்​க ஹர்​திக்​ பாண்​டி​யா தலை​மையி​லான மும்​பை அணி முயற்​சிக்​கக்​கூடும்​.

3-வது வெற்றியை நோக்கி.. வான்கடே மைதானத்தில் நடப்பு சீசனில் மும்பை அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆர்சிபிக்கு எதிராக தோல்வி கண்டிருந்த மும்பை அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை தோற்கடித்து இருந்தது. தற்போது 3-வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

மைதானம் எப்படி? – மும்பை வான்கடே மைதானம் சிவப்பு மண் ஆடுகளத்தை கொண்டது. பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். எனினும் தொடக்க ஓவர்களில் பவுன்ஸ் இருக்கும். இதை பயன்படுத்தி பந்து வீச்சாளர்கள் சரியான திசை மற்றும் லென்ந்த்தில் வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த மைதானத்தில் ரன்கள் குவிப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. இதுவரை வான்கடே மைதானத்தில் 118 டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 55 முறை வெற்றி பெற்றுள்ளன. இலக்கை துரத்திய அணிகள் 63 முறை வெற்றி கண்டுள்ளன.



Read More

Previous Post

ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

Next Post

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்… வாகா எல்லையும் மூடல்

Next Post
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்… வாகா எல்லையும் மூடல்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்... வாகா எல்லையும் மூடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin