Last Updated:
Summer Fruit Sales|கோடை வெயிலில் சூடுபிடிக்கும் பழங்கள் விற்பனை. புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை படுஜோர்.
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் வெயிலின் அளவுச் சதம் அடித்து வருகிறது. வெயில் அளவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்படுகிறது. அந்த வகையில் அதிகரித்துக் கொண்டே வருவதால் உடலையும், சருமத்தையும் பராமரிப்பது முக்கியம் என்று மருத்துவர்கள் தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
உடலில் நீர் சத்தைச் சீராக வைத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர் சத்து அதிகம் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கோடை காலம் என்றாலே வெயிலோடு சேர்ந்து தர்பூசணி பழம் தான் ஞாபகத்திற்கு வரும். அதாவது வெயில் காலத்தில் தர்பூசணி பழ சீசன் தொடங்கி விடும். வெயிலுக்கு இதமாகத் தர்பூசணி அதனுடைய ஜூஸ் பருகுவதன் மூலம் நம் சருமத்தை பாதுகாத்து கொள்ளலாம்.
அந்த வகையில் எல்லா பகுதிகளைப் போலவும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற பழங்களின் விற்பனை தொடங்கி ஜோராக நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் தர்பூசணி பழங்கள் தரமற்ற சாயம் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சில விவசாயிகள் வியாபாரிகள் தரமான பழங்களை மக்களுக்காக விற்பனை செய்து வருகின்றோம் என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைகால பழங்கள் விற்பனை எப்படி இருக்கிறது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
புதுக்கோட்டையில் 15 வருடங்களாகப் பழங்கள் விற்பனை செய்து வரும் வியாபாரி ஜாகித் உசேன் இதுகுறித்து பேசியபோது, நாங்கள் ஒவ்வொரு சீசனுக்கும் அதற்கேற்றார் போலப் பழங்களை விற்பனை செய்து வருகிறோம். இப்போது தர்பூசணி, கிர்ணி, பழம் பலாப்பழம் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றோம்.
தர்பூசணி பழ சீசனை பொருத்தவரை இந்த வருடம் கடந்த வருடத்தைக் காட்டிலும் விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது. ஏனென்றால் அனைத்து இடங்களிலுமே தர்பூசணியை விவசாயிகள் பயிரிட்டு அவர்களே விற்பனையும் செய்து வருகின்றனர். அதிக அளவில் தர்ப்பூசணி இறக்குமதி காரணமாகவும், வியாபாரிகளுக்கும் சரி விவசாயிகளுக்கும் அதிகம் லாபம் கிடைக்கவில்லை.
தற்போது ஒரு கிலோ தர்ப்பூசணி 13 ரூபாய் முதல் செய்து வருகின்றோம்.என ஜாகித் உசேன் தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் கிர்ணி பழம் போன்றவற்றையும் இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றோம் என்றும் அவர் கூறினார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் நாங்கள் திண்டிவனம் பகுதிகளில் இருந்தும் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாக ஜாகித் உசேன் தெரிவித்தார்.
அதிக வெயிலின் காரணமாக பழங்களும் அழுகிப்போதல், கெட்டுப் போதலால் வீணாகி விடுகின்றது. இதுவும் ஒரு இழப்பு தான் என அவர் தெரிவித்தார். தற்போது விற்பனை மந்தமாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும் என வியாபாரி ஜாகித் உசேன் நம்பிக்கை தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 23, 2025 5:52 PM IST

