கோத்தா கினாபாலு:
மைல் 7 அருகே உள்ள கம்போங் பத்து புதி ஜம்பாடன் 3 இல் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 21 வீடுகள் மற்றும் ஒரு சேமிப்பு அலகு என்பன எரிந்து நாசமாயின, இதில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆகியோர் காயமடைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, காலை 10.40 மணிக்கு சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்தது, உடனே தீயணைப்பு வீரர்கள் காலை 10.58 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர் என்று, சண்டக்கான் மண்டல தீயணைப்புத் துறை தலைவர் ஜஸ்ரி அப்துல் ஜல் கூறினார்.
அப்பகுதியில் நெருக்கமாக கட்டப்பட்ட மரத்தாலான வீடுகளாக இருப்பதால், அங்கு தீ பரவுவது எளிதாகிவிட்டது .
“ இருப்பினும் தீ அணைப்பு குழுவினர் காலை 11.41 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும், அருகிலுள்ள 50 வீடுகளையும் மூன்று படகுகளையும் நாங்கள் காப்பாற்றினோம்,” என்று அவர் கூறினார்.
1.2 ஹெக்டேர் (மூன்று ஏக்கர்) பரப்பளவில் தீ பரவியது, மேலும் தீக்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகளைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.


