Last Updated:
2003ஆம் ஆண்டு பண்டிட் மக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள் இரண்டு குழந்தைகள் உள்பட 24 காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த 25 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனந்தநாக் மாவட்டத்தில் சிறுபான்மை சமூகமான சீக்கிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர. அதே ஆண்டின் மார்ச் மாதத்தில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட 24 யாத்ரீகர்கள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர். 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2002 ஆம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 19 பேர் கொலை செய்யப்பட்டனர்.
2003ஆம் ஆண்டு பண்டிட் மக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள் இரண்டு குழந்தைகள் உள்பட 24 காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2005ஆம் ஆண்டு புல்வாமாவில் உள்ள மார்க்கெட்டில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு மாணவர்கள், 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர்.
2016-ஆம் ஆண்டு உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 30 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சூழலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தற்போது மிகப்பெரும் தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.
Chennai,Tamil Nadu
April 23, 2025 7:29 AM IST


