அமலாக்கத்துறை சோதனையும் முறைகேடு குற்றச்சாட்டும்
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இவ்விவகாரத்தை எழுப்ப முயன்றபோது, பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது ஜனநாயகப் படுகொலை எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார். “அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம், பிற அலுவலகங்கள் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்தியது. இதில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை,” என்று ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

