Last Updated:
Fishing Ban Impact| மீன் தடைக்காலத்திலும் மீன்களுக்கு சரியான விலை இல்லாததால் வேதனையில் மீனவ மக்கள்.
மீன்பிடி தடைக்காலத்தில் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும். ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தடைக்காலத்தில் வெளியூர் வியாபாரிகள் வராததால் மீன்கள் விலை குறைந்து உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே மொத்தமாக மீன்களை வாங்க வந்ததால் விலை குறைந்து விற்பனையானதாக பாம்பன் நாட்டுபடகு மீனவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் திருத்தப்பட்டு, விசைப்படகுகள் கரைக்கு ஏற்றி பராமரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மீனவர்கள் அண்டை மாநிலங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நாட்டு படகு மீனவர்கள் மட்டுமே கரையில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு மீன்பிடித்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு நேற்று இரவு (ஏப்ரல் 21 ) சென்று மீன்பிடிக்க சென்று விட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புகின்றனர்.
இதையும் வாசிக்க: கடலில் மிதக்கும் கப்பல்!! கரைக்கு ஏற்றும் முறை இப்படி தான்…
ஐந்து நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு கரையோர மீன்பிடி முறை என்பதால் பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காமல் சூடை, சாளை போன்ற மீன்கள் தான் அதிகமாக பிடித்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வப்போது சீலா, திருக்கை போன்ற பெரிய அளவிலான மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரை டன் வரை பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படும் சூடைமீன் கிலோ ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனையாவதாக தெரிவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடி தடைக்காலத்தில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், விலை குறைந்துள்ளதாக கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு தடைக்காலத்தில் கிலோ ரூ.100 வரை விற்பனையானதாகவும் தெரிவித்த மீனவர்கள் தற்போது விலை குறைந்து விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, ரூ.35-க்கு வாங்கவே ஆள் இன்றியும் வெளியூர் வியாபாரிகள் வராமல், உள்ளூர் வியாபாரிகள் வாங்கி வெளியூருக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால் தடைக்காலத்தில் உயரும் என எதிர்பார்த்த மீன்களின் விலை குறைவாக செல்கிறது. ஒரு படகில் 5 நபர்கள் மீன்பிடிக்க சென்று நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் என்றால் டீசல் போன்ற இதர செலவு காரணமாக குறைந்த அளவு லாபத்தை மட்டுமே சந்தித்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 22, 2025 10:41 AM IST
Fishing Ban Impact: “இந்த 35 ரூபாய் வைத்து தான் 61 நாள் ஓட்டி ஆகணும்” – தடை காலத்திலும் குறைந்த மீன்களின் விலை…

