“ஆர்சிஏ மூத்த அதிகாரியின் ஒவ்வொரு கருத்துகளையும், நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம், கடுமையாக எதிர்க்கிறோம். பொதுவான இந்த குற்றச்சாட்டுகள் அணியின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கின்றன. தேவையற்ற சர்ச்சையைத் தூண்டுகின்றன, மேலும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. அவை ராயல் மல்டிஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RMPL), ராஜஸ்தான் ராயல் அணியின் உரிமையாளர், பிசிசஐ, ராஜஸ்தான் மாநில விளையாட்டு கவுன்சில் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் நம்பகத்தன்மையையும் குறைத்து மதிப்பிட உட்படுத்துகின்றன.

