Last Updated:
Pope francis ring | போப் பிரான்சிஸ் மறைவால், அவருக்கு வழங்கப்பட்ட மீனவர் மோதிரம் உடைக்கப்படுகிறது. இது அவரது அதிகாரம் முடிவடைந்ததை குறிக்கும்.
போப் பிரான்சிஸ் உயிரிழந்த நிலையில், அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மீனவர் மோதிரம் உடைக்கப்பட இருக்கிறது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்புக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மீனவர் மோதிரம் வழங்கப்பட்டது. மீனவரான முதல் போப் பீட்டரின் வாரிசு என்பதை குறிக்கும் வகையில் இந்த மோதிரம் போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க | போப் பிரான்சிஸ் மறைவு.. சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ரோஜிட்டோ.. அப்படி என்றால் என்ன?
இந்த மோதிரத்தில், போப் பீட்டர் படகில் அமர்ந்து கடலில் வலையை வீசுவது போல் உள்ளது. கடவுளின் பக்கம் மனிதர்களை இழுப்பது இதற்கு அர்த்தமாகும். இந்த மீனவர் மோதிரம் உடைக்கப்பட்டால், ஒரு போப்பின் அதிகாரம் முடிந்துவிட்டதாக அர்த்தமாகும். அந்த வகையில் போப் பிரான்சிஸ் அணிந்திருந்த மீனவர் மோதிரம் உடைக்கப்படுகிறது.
April 22, 2025 2:09 PM IST


