• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 22, 2025 2:18 PM IST

போதுமான விழிப்புணர்வு இல்லாமை, தகவல்கள் குறித்து அப்டேட்டாக இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல யூசர்கள் கிரெடிட் கார்டு பலன்களை பயன்படுத்துவது இல்லை என்பது ஆய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

News18News18
News18

கிரெடிட் கார்டுகள் மூலம் கிடைக்கும் பல்வேறு நன்மைகளை கிட்டத்தட்ட 70 சதவீத இந்திய கிரெடிட் கார்டு யூசர்கள் பயன்படுத்துவது கிடையாது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் பணத்தை சேமிக்கக் கிடைக்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சேவ்சேஜ் நிறுவனம் “கிரெடிட் கார்டு ரிவார்ட்ஸ் பிஹேவியர் சர்வே 2025” என்ற ஆய்வை இந்த வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையே நடத்தியது.

இதில், இந்தியாவின் முன்னணி 9 நகரங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு யூசர்களின் பதில்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டுமே 109 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் ஆக்டிவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. மேலும், இதன் மூலமாக கடன் அடிப்படையில் ஆன செலவு செய்தல் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

போதுமான விழிப்புணர்வு இல்லாமை, தகவல்கள் குறித்து அப்டேட்டாக இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல யூசர்கள் கிரெடிட் கார்டு பலன்களை பயன்படுத்துவது இல்லை என்பதும் இந்த ஆய்வு மூலமாக கண்டறியப்பட்டது.

ஆய்வு மூலமாக கிடைத்த முக்கியமான தகவல்கள்:

  • 50 சதவீத யூசர்கள் தங்களுடைய ரிவார்டுகளை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது கிடையாது. அடிப்படையான கேஷ்பேக் பயன்படுத்துவது போல பயண சலுகைகள் அல்லது பார்ட்னர் டீல்கள் போன்றவற்றை யூசர்கள் தவற விடுகின்றனர்.
  • 50 சதவீத யூசர்கள் தங்களுடைய ரிவார்டு பாயிண்டுகளை காலாவதியாக விட்டு விடுகின்றனர். இது பெரும்பாலும் சரியான கண்காணிப்பு இல்லாமல் அல்லது விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்படுகிறது.
  • 60% யூசர்கள் ஏர்போர்ட் லான்ச் அனுமதி, டிராவல் இன்சூரன்ஸ், கோல்ஃப் வசதிகள் போன்ற பிரீமியம் பலன்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது இல்லை.
  • எக்கச்சக்க பலன்கள் வழங்கப்பட்ட போதிலும் 55 சதவீத தினசரி டிரான்ஸாக்ஷன்கள் UPI அல்லது கேஷ் மூலமாக செய்யப்படுகின்றன. அதாவது, கிரெடிட் கார்டுகள் முழு வீச்சாக பயன்படுத்தப்படவில்லை.
  • 60% யூசர்கள் கிரெடிட் கார்டுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்கள் வழங்கும் ஆலோசனைகளை நம்பி இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தகுந்த பொருளாதார வழிகாட்டுதல் கிடைப்பது இல்லை.
  • சிறந்த பலன்களுக்காக 65 சதவீத கிரெடிட் கார்டு யூசர்கள் வேறு கிரெடிட் கார்டுக்கு மாறுவதற்கு தயாராக உள்ளனர்.

இதையும் படிக்க: Credit Card Payments | கிரெடிட் கார்டு பேமென்ட் பண்ண அடிக்கடி மறந்து போயிடுறீங்களா…? அப்படின்னா இதை செய்யுங்க…!

“கிரெடிட் கார்டு ரிவார்டுகளை பயன்படுத்துவதற்கான சரியான கருவிகள் அல்லது அறிவுத்திறன் இல்லாத காரணத்தால் பெரும்பாலான இந்தியர்கள் பணத்தை சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை என்பதை இந்த ஆய்வு கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன” என்று சேவ்சேஜ்-ஐ சேர்ந்த அதிகாரி ஆஷிஷ் லாத் கூறுகிறார். “ஒவ்வொரு கிரெடிட் கார்டு யூசரும் தங்களுடைய கிரெடிட் கார்டுகளை முழுமையாக பயன்படுத்த உதவி செய்வதே எங்களுடைய நோக்கம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

First Published :

April 22, 2025 2:18 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

Read More

Previous Post

IPL 2025 : ராஜஸ்தான் – லக்னோ மேட்ச்சின்போது சூதாட்டம் நடந்ததா? முதல்வரிடம் புகாரளித்த அணி நிர்வாகம்

Next Post

உடைக்கப்படும் போப் பிரான்சிஸின் மீனவர் மோதிரம்.. ஏன் தெரியுமா?

Next Post
உடைக்கப்படும் போப் பிரான்சிஸின் மீனவர் மோதிரம்.. ஏன் தெரியுமா?

உடைக்கப்படும் போப் பிரான்சிஸின் மீனவர் மோதிரம்.. ஏன் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin