சிங்கப்பூர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, 28 வயதுமிக்க விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் அவர் ஈடுப்பட்டதாவும், இந்நிலையில் அவர் மீது இன்று (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
விமான பணிப்பெண், பெண் பயணி ஒருவரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார், அப்போது கழிப்பறையின் தரையில் ஒரு டிஷ்யூ பேப்பர் கிடந்துள்ளது. அதை எடுக்க பணிப்பெண் குனிந்தபோது, ஆடவர் பணிப்பெண்ணின் பின்னால் வந்து பிடித்து, தன்னோடு சேர்த்து கழிவறைக்குள் தள்ளியதாக முதற்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டுள்ளது.
அப்போது உடன் இருந்து பார்த்த பெண் பயணி, பணிப்பெண்ணை உடனடியாக கழிப்பறையிலிருந்து வெளியே கொண்டுவர உதவினார். பின்னர் இந்த சம்பவம் விமானக் குழு மேற்பார்வையாளருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், விமானம் சாங்கி விமான நிலையத்தை வந்து அடைந்ததும் விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகள் அந்த ஆடவரை கைது செய்தனர்.
இந்தக் குற்றத்திற்கு ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது ஏதேனும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.
ஒர்க் பெர்மிட் அனுமதியில் சிறப்பான மாற்றம் – ஜூலை முதல் அமல்; வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2வது வழக்கு
இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக விமான மானபங்க செய்தியை காவல்துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இன்னொறு இந்திய நாட்டவரான பாலசுப்ரமணியன் ரமேஷ் என்ற 73 வயது ஆடவருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவரும் விமான பணிப்பெண்ணிடம் மானபங்க செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
Feature Image: Changi Airport/Facebook

