GE2025: சிங்கப்பூரில் வரும் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது நாம் அறிந்தது தான்.
இந்நிலையில், அதற்கான பிரச்சார வழிகாட்டி குறிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
நாளை வேட்புமனு உறுதிசெய்யப்பட்ட பின்னர் கட்சிகள் விளம்பரம் செய்யத் தொடங்கலாம். அதற்கு முன்பு வரை புதிய பதாகைகள், கொடிகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு அனுமதி இல்லை.
பிரச்சார விளம்பரத்தில் வேட்பாளர்களின் பெயர், அரசியல் கட்சி சின்னம் அல்லது முத்திரை ஆகியவற்றை யார் வெளியிட்டது என்ற விவரமும் இருக்க வேண்டும்.
நடைப்பயண பிரச்சாரங்கள் மேற்கொள்ளலாம் மற்றும் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்கலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இவை அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் ஆணையம் மேற்கோள்காட்டியுள்ளது.
மேலும், ஆன்லைன் வழியாக பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post GE2025: சிங்கப்பூரில் தேர்தல் நேரத்தில் செய்யக் கூடாதவை – தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil Daily Singapore.

