April 22, 20258:16 AM IST
Tamil Live Breaking News : நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை
நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

