Last Updated:
RBI | 18 வயது பூர்த்தியானவுடன், கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பத்தை பெற்று, வழக்கமான நடைமுறையை பின்பற்ற ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், சுயமாகவே வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
சிறார்களுக்கான வங்கி கணக்கு தொடக்கம் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அதன்படி, 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தங்களது வங்கிக் கணக்கை சுயமாக தாங்களே கையாள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் டேர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தன்னிச்சையாக வங்கிக் கணக்கை தொடங்கவும், வங்கிகளின் தனிப்பட்ட வரம்புக்கு உட்பட்டு, குறிப்பிட்ட தொகை வரை, தாங்களாகவே பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இணைய வங்கி சேவை, ஏ.டி.எம்., வசதிக்கான டெபிட் கார்டு, காசோலை உள்ளிட்ட வசதிகளை வழங்குவது வங்கிகளின் முடிவுக்கு உட்பட்டது என்றும், இந்த கணக்குகளில் எப்போதுமே ஏதேனும் இருப்பு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Gold Rate : லட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை.. வாங்குவது நல்லதா? விற்பது நல்லதா?
18 வயது பூர்த்தியானவுடன், கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பத்தை பெற்று, வழக்கமான நடைமுறையை பின்பற்ற ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களை வரும் ஜூலை மாதத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, வங்கிகள் 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களை தாமாகவே சேமிப்பு மற்றும் டேர்ம் டெபாசிட் கணக்குகள் தொடங்கவும், இயக்கவும் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 22, 2025 9:02 AM IST


