2014-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மிடாளம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதாக ராஜேஷ் குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 3 பேர் இறந்த நிலையில், மீதமுள்ள ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாத சிறைத் தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

