Last Updated:
இந்திய பங்குச்சந்தையில் திங்கட்கிழமை ஏற்பட்ட உயர்வால் முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 855 புள்ளிகள், நிஃப்டி 274 புள்ளிகள் உயர்ந்தன.
இந்திய பங்குச்சந்தைகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட உயர்வு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. காலையில் ஏற்பட்ட முன்னேற்றம் நாள் முழுவதும் நீடித்தது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 855 புள்ளிகள் உயர்ந்து 79,408 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண் நிஃப்டி 274 புள்ளிகள் உயர்ந்து 24,125 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தன.
டெக் மஹிந்திரா, டிரென்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எல்ஐசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை கண்டன. வங்கி, நிதித்துறை, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் தலா 2 விழுக்காடு லாபத்தை பதிவு செய்தன. கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 31 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
April 21, 2025 10:13 PM IST


