விடையை தேர்வு செய்வதில் குழப்பம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைபெற்று, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமூக அறிவியல் வினாத்தாளில் நான்காவது கேள்வியின் கூற்று முழுமையாக முரண்பட்டதாக இருந்ததை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். கேள்வியில் இரு வாக்கியங்களும் ஒரே கூற்றைக் கொண்டிருந்தாலும், விடைகள் “அ சரி, ஆ தவறு” மற்றும் “ஆ சரி, அ தவறு” என முரணாக இருந்தன. இதையடுத்து, ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் துறையிடம் கோரிக்கை வைத்தனர்.

