• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரெப்போ ரேட் குறைப்பு எதிரொலி… எச்டிஎஃப்சி வங்கி vs ஐசிஐசிஐ வங்கி vs எஸ்பிஐ வழங்கும் FD-க்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரெப்போ ரேட் குறைப்பு எதிரொலி… எச்டிஎஃப்சி வங்கி vs ஐசிஐசிஐ வங்கி vs எஸ்பிஐ வழங்கும் FD-க்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எச்டிஎஃப்சி வங்கி vs ஐசிஐசிஐ வங்கி vs எஸ்பிஐ நிலையான வைப்புத்தொகை விகிதங்கள்: இந்த வாரம் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (RBI MPC) பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களைக் குறைத்ததால், வங்கிகளும் நிலையான வைப்புத்தொகை மற்றும் கடன் விகிதங்களைக் குறைத்துள்ளன. அந்த வகையில், எச்டிஎஃப்சி வங்கி, எஸ் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் ஏற்கனவே வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

தற்போது, ​​இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, வாடிக்கையாளரின் வயது மற்றும் கால அளவைப் பொறுத்து, ரூ.3 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத் தொகைகளுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதேபோல், ஐசிஐசிஐ வங்கி 7.85 சதவீதம் வரையிலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 7.50 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) போன்ற முன்னணி வங்கிகள் வழங்கி வரும் நிலையான வைப்புத்தொகை (FD) மீதான வட்டி விகிதங்களின் விரிவான ஒப்பீட்டை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கியின், ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத் தொகைகளுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் (ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும்):

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.00 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.00 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.00 சதவீதம்
  • 90 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.00 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.25 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.50 சதவீதம்
  • 1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.10 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.60 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.75 சதவீதம்
  • 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்.

இதையும் படிக்க: Gold loan | வங்கிகள் மற்றும் NBFC-கள் கோல்டு லோனுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்…!

2. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இதேபோல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் (ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்புத் தொகைகளுக்கு) (ஏப்ரல் 15, 2025 முதல் அமலுக்கு வரும்):

  • 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.00 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.00 சதவீதம்
  • 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.75 சதவீதம்
  • 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.00 சதவீதம்
  • 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.20 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குக் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.40 சதவீதம்
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குக் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.25 சதவீதம்
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம் (‘எஸ்பிஐ வீ கேர்’ திட்டத்திற்கான 50 bps பிரீமியம் உட்பட)

இதையும் படிக்க: Gold Rate : தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் தகவல்.. விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு

3. ஐசிஐசிஐ வங்கி

இந்தியாவின் மற்றொரு முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத் தொகைகளுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் (ஏப்ரல் 11, 2025 முதல் அமலுக்கு வரும்):

  • 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.00 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.75 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.00 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.25 சதவீதம்
  • 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.25 சதவீதம்
  • 271 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.50 சதவீதம்
  • 1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.20 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவானது வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.85 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.75 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: அனைத்து குடிமக்களுக்கும் – 6.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.40 சதவீதம்
  • 5 ஆண்டுகள் (வரி சேமிப்பு எஃப்டி): அனைத்து குடிமக்களுக்கும் – 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 7.50 சதவீதம்.

ஏப்ரல் 9ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC), ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 6 சதவீதமாக அறிவித்தது. மேலும், அது தனது கொள்கை நிலைப்பாட்டை ‘நடுநிலை’ என்பதில் இருந்து, ‘இணக்கமான’ நிலைக்கு மாற்றியிருக்கிறது. இதனால், எதிர்காலத்தில் மேலும் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

April 21, 2025 6:32 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ரெப்போ ரேட் குறைப்பு எதிரொலி… எச்டிஎஃப்சி வங்கி vs ஐசிஐசிஐ வங்கி vs எஸ்பிஐ வழங்கும் FD-க்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா…?

Read More

Previous Post

வீணாய்ப் போன சிஎஸ்கே: பவுண்டரி அடிக்கும் முயற்சி கூட இல்லையா? | CSK Not even made attempt to hit boundary ipl 2025 explained

Next Post

யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்! | Who is Pope Francis – The reformist leader who breaks traditions

Next Post
யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்! | Who is Pope Francis – The reformist leader who breaks traditions

யார் இந்த போப் பிரான்சிஸ்? - வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்! | Who is Pope Francis - The reformist leader who breaks traditions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin