ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதி வைத்திருப்பவர்களை பணியமர்த்துவதற்கான Non-traditional source என்னும் நாடுகளின் பட்டியலை சிங்கப்பூர் விரிவுபடுத்துகிறது.
அதன் அடிப்படையில், பூட்டான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் புதிததாக சேர்க்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இது ஜூன் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.
தற்போது அந்த பட்டியலில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அதோடு மேற்குறிப்பிட்ட 3 நாடுகளும் சேர்க்கப்படும்.
இந்த NTS நாடுகளின் பட்டியலில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை, ஒர்க் பெர்மிட் அனுமதியின்கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முதலாளிகள் வேலைக்கு அமர்த்தலாம்.
மேலும் NTS தொழில் பட்டியலில் பின்வரும் வேலைவாய்ப்புகளும் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) குறிப்பிட்டுள்ளது.
- சமையல்காரர்கள்
- கனரக வாகன ஓட்டுநர்கள் (செல்லுபடியாகும் கனரக வாகன உரிமம் Class 4 மற்றும் Class 5 வைத்திருக்கும் ஓட்டுனர்களுக்கு)
- உற்பத்தித் துறை ஆபரேட்டர் (Manufacturing operator)
இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1, 2025 முதல் நடப்புக்கு வரும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த NTS வேலைவாய்ப்புகளில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான தகவல்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் செப்டம்பர் 1-க்கு முன்பு வெளியாகும். தொடர்ந்து நம் “தமிழ் டெய்லி சிங்கப்பூர்” தளத்துடன் இணைப்பில் இருங்கள்.
ஒர்க் பெர்மிட் அனுமதியில் சிறப்பான மாற்றம் – ஜூலை முதல் அமல்; வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சி

