கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் A+ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்.
இந்த வீரர்களுக்கு அவர்கள் இருக்கும் பிரிவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது A+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடி சம்பளமும், A பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடி சம்பளமும் வழங்கப்படுகிறது. B பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி சம்பளமும், C பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடி சம்பளமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் இந்த பட்டியலில் மொத்தம் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால், இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலுக்கு திரும்பியுள்ளனர்.
மேலும் நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தின்படி பட்டியலில் உள்ள வீரர்கள் பின்வருமாறு:
கிரேடு A+: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேடு A: முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்
கிரேடு B: சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர்
கிரேடு C: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ரானா.
April 21, 2025 1:23 PM IST

