Singapore Indians: சிங்கப்பூரில் வசிக்கும் படித்த பட்டதாரி இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.
அதாவது 10 இந்தியர்களில் நான்கு பேர் பட்டதாரிகளாக உள்ளனர் என்று சமீபத்திய சிண்டா என்னும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு மன்றத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
நூலிழையில் தப்பிய வெளிநாட்டு ஊழியர்கள் குழு; சாலையில் கவனம் முக்கியம்
2020 நிலவரப்படி; 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்களில் 41% பேர் பட்டம் பெற்றுள்ளனர். இது 2000ல் 16.5% ஆக இருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், இவை குடிநுழைவு மற்றும் சமூக வாழ்க்கை தரத்தால் மேம்பாட்டதாக கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகம் கல்வி மட்டும் அல்லாது குடும்ப மாதாந்திர வருமான நிலைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக திரு.சண்முகம் தெரிவித்தார்.
அதாவது, 2010ல் S$6,000 ஆக இருந்த இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம், 2020ல் S$8,500 என 40% உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

