Last Updated:
10G Internet: ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைவரின் கையிலும் தற்போது மொபைல் போன் உள்ளது. அதில் இணைய சேவையும் உள்ளது. மேலும், இது உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவடைந்து உள்ளது. மேலும், பள்ளிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் இணைய சேவை என்பது தற்போது அத்தியாவசியமாகி உள்ளது. அந்த அளவிற்கு இணையம் உலகை ஆக்கிரமித்துள்ளது.
10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்
இணைய பயன்பாட்டை பொறுத்தமட்டில், அதன் வேகம் முக்கியமான ஒன்று. ஆரம்பத்தில் 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என்று அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
Also Read: உக்ரைனுக்கு எதிரான போர் இன்று இரவு வரை நிறுத்தம்.. ஈஸ்டரையொட்டி ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு!
5ஜி இணைய சேவை அறிமுகம்
இப்பகுதி தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தகவலின்படி, நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 எம்.பி.பி.எஸ். ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 எம்.பி.பி.எஸ். ஆக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது தான் 5ஜி சேவையே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
April 21, 2025 7:18 AM IST


