பிரியா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த மோஹித், கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஓட்டல் அறையில் மோஹித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மனைவி பிரியா மற்றும் அவரது பெற்றோர் உட்பட குடும்பத்தினர் தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வந்ததாக மோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் : நடிகர் பாபிசிம்ஹாவின் கார் மோதி விபத்து.. உண்மையில் காரை ஓட்டியது யார்..? கத்திப்பாராவில் நடந்தது என்ன?
குறிப்பாக, வீடு மற்றும் சொத்துகளை தனது பெயரில் எழுதிவைக்க மனைவி வலியுறுத்தியதாகவும், தவறும் பட்சத்தில் வரதட்சணை கேட்டு அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக பொய் புகார் அளிப்பேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரியாவை கருக்கலைப்பு செய்ய அவரது தாயார் தூண்டியதாகவும், தனக்கு எதிராக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மைத்துனர் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்ததாக வீடியோவில் பதிவு செய்துள்ளார். தன்னைப் போன்ற அப்பாவி ஆண்கள் மீது பொய் புகார் அளித்து மிரட்டும் பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டம் இருப்பது போன்று, ஆண்களை பாதுகாக்கவும் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மரணம் தொடர்பாக உரிய நீதி கிடைக்காவிட்டால், தனது அஸ்தியை சாக்கடையில் கொட்டி விடுங்கள் என்று கடைசி வீடியோவில் மோஹித் உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு இதேபோன்று பெங்களூருவில் ஐடி ஊழியரான அதுல் சுபாஷ் என்பவர், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறி, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோன்று, தற்போது உத்தர பிரதேசத்தில் பொறியாளரான மோஹித், தனது காதல் மனைவி பொய்யாக வரதட்சணை புகார் அளித்ததாக கூறி, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
April 20, 2025 7:52 PM IST
சொத்தை அபகரிக்க மனைவி போட்ட பிளான்.. விபரீத முடிவு எடுத்த கணவன்.. போலீஸ் கையில் கிடைத்த முக்கிய ஆதாரம்!

