Last Updated:
வெற்றியின் மூலம் மும்பை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் அஸ்வினி குமார் வேதத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஷேக் ரசீத் 19 ரன்களில் வெளியேற, அடுத்து இணைந்த ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
துபே 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன் களமிறங்கினர்.
தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இணைந்த சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா இணை சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஒவ்வொரு ஓவரிலும் இருவரும் சிக்சர், பவுண்டர்களை விளாசினர்.
இதனால் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இருவரும் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை சென்னை அணி வீரர்கள் தவறவிட்டனர். ரோகித் சர்மா 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்களும் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 15.4 ஓவர்களில் மும்பை அணி 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
April 20, 2025 11:21 PM IST


